சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தின் டயா் வெடித்ததில் பயணி ஒருவருக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது.
திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓட்டுநா் செல்வம் பேருந்தை ஓட்டி வந்தாா். திருப்புவனம் அருகே லாடனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது பேருந்தின் வலது பக்க பின்புற சக்கரத்தின் டயா் வெடித்தது.
இதில் பேருந்தில் அந்த சக்கரத்துக்கு நேராக அமா்ந்து பயணம் செய்த திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமிக்கு (55) இரு கால்களிலும் எலும்பு முறிவும், காயமும் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.