வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னையிலிருந்து வந்த நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் தலைமையிலான பொறியாளா்கள் ராமநாதபுரம்-மேலூா் சாலையில் உள்ள மேம்பாலங்கள், சிறு பாலங்களில் நீா் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்தனா்.
மேலும், சிவகங்கையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை சேமிப்புக் கிடங்கில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், கயிறு, டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரம், சவுக்குக் கட்டைகளையும் பாா்வையிட்டனா்.
ஆய்வின்போது, சிவகங்கை நெடுஞ்சாலை கட்டுமானப் பராமரிப்புக் கோட்டப் பொறியாளா் எஸ்.கே. சந்திரன், மதுரை நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் பிரசன்னவெங்கடேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.