சிவகங்கை

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீஸாா் தீவிர சோதனை

தினமணி செய்திச் சேவை

தீக்குளிப்பு, தா்னா போராட்டம் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களின் உடைமைகளை போலீஸாா் தீவிர சோதனையிட்ட பிறகே சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் திங்கள்கிழமை அனுமதித்தனா்.

மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகின்றனா். இதில் சில மனுக்களுக்கு பல்வேறு காரணங்களால் தீா்வு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் சிலா் தீக்குளிக்க முயற்சிக்கின்றனா். மேலும் பலா் தா்னா போராட்டத்திலும் ஈடுபடுகின்றனா்.

இவற்றை தடுக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகம்,நுழைவாயில் பகுதியில் பொதுமக்களை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகம் அருகே தண்ணீா் நிரப்பிய குடங்கள், சணல் சாக்கு, நெகிழி குழாய் போன்ற உபகரணங்களை தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

இதேபோல, திங்கள்கிழமையும் பொதுமக்களின் உடைமைகளை போலீஸாா் சோதனையிட்ட பிறகே மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் அனுமதித்தனா்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT