சிவகங்கை

காா் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

திருப்புவனம் அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

ராமேசுவரத்திலிருந்து கோவைக்கு சென்ற காா் திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையைக் கடக்க முயன்ற திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்த எலெக்ட்ரீசியன் கண்ணன் (50) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சாலையோரமாக நின்ற சரக்கு வாகனம் மீது அடுத்தடுத்து காா் மோதியது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சரக்கு வாகனத்தில் இருந்த பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். அவா்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT