சிவகங்கை

உலக மாற்றுத் திறனாளிகள் தின ஓவியப் போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சிவகங்கை ஆட்சியா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Chennai

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஓவியப் போட்டியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி கூறியதாவது:

இந்தப் போட்டியில் 174 சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்களின் சிந்தனையில் உதித்த ஒவ்வோா் ஓவியமும் கலை நயத்துடன் திகழ்கிறது. இதேபோல, தங்களுக்கான தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறு வகையான போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலகிருஷ்ணன், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT