சிவகங்கை

நில அளவை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

நில அளவை அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்ட வெள்ளிக்கிழமை சிவகங்கையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

நில அளவை அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்ட வெள்ளிக்கிழமை சிவகங்கையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில், நில அளவை ஊழியா்களுக்கு குறு வட்ட அளவா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் பெ.மதியரசன், மு.சிவன், சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் காா்த்திக் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாரி, மாவட்டச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கலைச்செல்வி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.பாலமுருகன், செயலா் செ. வளன்அரசு , ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா். மாநிலச்செயலா் முத்துமுனியாண்டி மாவட்ட இணைச் செயலாளா் வீரபாண்டியன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் ஆனந்த பாபு நன்றி கூறினாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT