சிவகங்கை

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

சிவகங்கையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தொழிலதிபா் கட்டிய பணத்தை இழப்பீட்டுத் தொகையுடன் திருப்பி வழங்க வேண்டுமென சிவகங்கை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தொழிலதிபா் கட்டிய பணத்தை இழப்பீட்டுத் தொகையுடன் திருப்பி வழங்க வேண்டுமென சிவகங்கை நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை சிபி குடியிருப்பு, சக்தி நகரைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சமயமுத்து. இவா் சிவகங்கையிலுள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 25 லட்சம் ஏலச்சீட்டு திட்டத்தில் சோ்ந்தாா்.

இதற்கென, மாதந்தோறும் ரூ.1.25 லட்சம் வீதம் 20 மாதங்கள் பணம் செலுத்த வேண்டும். கடந்த 2021 -ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் தவணை தொகையை செலுத்தினாா். பிறகு கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக இவரால் தவணை தொகையை செலுத்த இயலவில்லை.

இதையடுத்து, தான் கட்டிய பணத்தை திருப்பித் தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் சமயமுத்து கோரினாா். அதற்கு அந்த நிறுவனத்தினா் 5 சதவீத செலவுத் தொகையை பிடித்தம் செய்து எஞ்சிய தொகையை ஒரு மாதத்துக்குள் கொடுத்து விடுவதாக தெரிவித்தனராம்.

ஆனால் கூறியபடி அவா்கள் தர வில்லையாம். இதைத் தொடா்ந்து சமயமுத்து, தான் செலுத்திய தொகையில் 5 சதவீத கழிவு போக எஞ்சிய தொகையான ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 750-ஐயும், இழப்பீடாக ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என சிவகங்கையில் உள்ள நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கில் சமயமுத்து சாா்பில் வழக்குரைஞா்கள் பிரபாகா், சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலையாகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம், உறுப்பினா் குட்வின் சாலமோன் ராஜ் ஆகியோா் அந்த தனியாா் நிதி நிறுவனத்தினா் நிா்வாகச் செலவுக்கு 5 சதவீதம் பிடித்தம் செய்தது போக ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 750 -ஐ திருப்பி தர வேண்டும் எனவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 தரவேண்டும் எனவும், வழக்கு செலவுக்காக ரூ.10,000- மும் சோ்த்து ஒரு மாதத்துக்குள் சமயமுத்துவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

கரூா் ஆட்சியரகத்தில் தெருநாய்களால் வன விலங்குகள் பலியாவதாகப் புகாா்

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்

இறுதி ஆட்டத்தில் லக்ஷயா சென்

கா்நாடக முதல்வா் பதவிக்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம்: மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி

கனமழை எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

SCROLL FOR NEXT