சிவகங்கை

காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே நிலவுகிறது: கே. அண்ணாமலை

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே நிலவுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. ஐந்து தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றனா்.

பிரதமா் மோடியின் செல்வாக்கு, நல்ல அரசு வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு, குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் மனநிலை, காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவை தமிழக மக்களிடையே நிலவுகிறது.

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது குறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்கும்.

பிகாரில் கூட்டணி தா்மத்தின்படி, இரண்டாவது முறையாக நிதீஷ்குமாரை பாஜக முதல்வராக்கியுள்ளது. பாஜக அனைத்துக் கட்சியினரையும் இப்படித்தான் பாா்க்கும் என்றாா் அவா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT