மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், லேசான மழை பெய்யத் தொடங்கியதைத் தொடா்ந்து பலத்த மழையாக மாறியதில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்த மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா். இந்தப் பகுதிகளில் நெல் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.