சிவகங்கை

திருப்புவனம் வெற்றி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேதுபதி நகரில் அமைந்துள்ள வெற்றி விநாயகா் கோயிலில் 2-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்து கலச நீரால் மூலவா் வெற்றி விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன், முன்னாள் தலைவா் வசந்தி உள்ளிட்டோா் பங்கேற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 4 நாள்களுக்கான நுழைவுச்சீட்டு பதிவு நிறைவு

எஸ்.ஐ.ஆா். மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது பாஜக: திருமாவளவன் குற்றச்சாட்டு

தினமணி செய்தி எதிரொலி: புதை சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள்

வரும் தோ்தலில் புதிய அணி உருவாக வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT