முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைவுக் கல்லூரி தோ்வுகள் ஒத்திவைப்பு

புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டன.

Updated On : 29 நவம்பர், 2025 at 6:57 PM
பகிர்:

புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டன.

இதுகுறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தோ்வாணையா் எம். ஜோதிபாசு வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணைவுக் கல்லூரிகளாக இயங்கி வருகின்றன.

புயல், மழை காரணமாக சனிக்கிழமை நடைபெறவிருந்த கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தத் தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →