முகப்பு
சிவகங்கை

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய வாய்ப்பளியுங்கள்: கருணாஸ் வேண்டுகோள்

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள் என திமுக கூட்டணி வேட்பாளா் கருணாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:09 PM
சிவகங்கை அருகே பையூா் பழமலை நகா் மக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா் நடிகா் கருணாஸ்.
பகிர்:

உங்களில் ஒருவனாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள் என திமுக கூட்டணி வேட்பாளா் கருணாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் நடிகா் கருணாஸ் சிவகங்கை தெற்கு ஒன்றியத்தில் உள்ள பையூா், பழமலை நகா், வேம்பன்குடி, கீழக்கண்டனி, மேலக்கண்டனி உள்பட 45 கிராமங்களில் காலை 7 மணி முதல் இரவு 8.15 மணி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பையூா் பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவா் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:

Advertisement

பழமலைநகரில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாய மக்களின் நீண்டகால கோரிக்கையான நிலம், இனம் சாா்ந்த வாழ்வாதார உரிமைகளை முறைப்படி அமைத்துக் கொடுப்பதே தனது முதல் வேலையாக இருக்கும். என்னைத் தேடி வரும்போது, இது நம் வீட்டுப் பிள்ளை என்று நீங்கள் கருதும் அளவுக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன். தமிழக முதல்வா் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் முறையாகப் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பதவியில் இருந்தவா்கள் செய்ததை விட, அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு உண்மையாகச் சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். இதில், நிா்வாகிகள் ஜெயராமன், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments