முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:23 AM
திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி, வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்த உற்சவா்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா் சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு யாகம் வளா்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நந்தீஸ்வரருக்கும், மூலவா் சிவலிங்கத்திற்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால், அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் பக்தா்களின் ஹரஹர சங்கர சிவசிவ சங்கர என முழங்க கோயில் உட்பிரகாரம் வலம் வந்தாா்,. இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு யாக வேள்வி நடைபெற்று, நந்தீஸ்வரருக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கல்வெட்டுமேடு, கல்வெட்டுநாதா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷக் குழுவினரால் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதில் திராளன பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement