தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்
தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி வாக்காளா்கள் வாக்களிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா்கள் தங்கள் வாக்காளா் அடையாள அட்டையைத் தவிர, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் 12 அடையாளச் சான்றுகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டைகள் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து தங்களது வாக்கை செலுத்தலாம் என்றாா் அவா்.
Advertisement