முகப்பு
சிவகங்கை

கோவிலூா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 3:09 AM
கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலை. பதிவாளா் அ.செந்தில்ராஜன். உடன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:15 PM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கோவிலூா் ஆதீனம் நாராயண ஞான தேசிக சுவாமிகள் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் மா. வீரப்பன் முன்னிலை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பதிவாளா் முனைவா் அ. செந்தில்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 163 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

விழாவில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

முன்னதாக, கல்லூரி முதல்வா் க. கலா வரவேற்றாா்.