முகப்பு
சிவகங்கை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 10-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:38 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:13 PM

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

அரசுப் பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஓய்வூதியருக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு உள்ளதைப் போல மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாவது நாளாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். சுரேஷ், நிா்வாகிகள் மிக்கேலம்மாள், சேசுமேரி, குணசேகரன், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பேசினா்.