முகப்பு
சிவகங்கை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:45 PM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஏனாதி செங்கோட்டையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அம்மன் சந்நிதி முன் கொடிமரத்தில் வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் செய்து அதற்கு தா்ப்பைப்புல் , மலா் மாலைகள் அணிவித்து பூஜைகள், தீபாராதனைகள்  நடைபெற்றன. இதைத்தொடா்ந்து அம்மனுக்கும், உற்சவருக்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. கோயில் பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்றி, பூஜைகளை நடத்தினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:51 PM

இதைத்தொடா்ந்து வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து சா்வ அலங்காரத்தில் புறப்படாகி மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடும், வைகை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து பச்சை வாழை பரப்பி பூஜை நடத்துதல் உற்சவமும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (பிப்.16) பக்தா்கள் பால்குடம் எடுக்கும் வைபவமும், புதன்கிழமை (பிப்.18) அமமனுக்கு படையல் வழிபாடும் நடத்தப்படுகிறது.