கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 
சிவகங்கை

கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கீழடியில் இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த நிலையில், உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தனது மனைவி, மகனுடன் கீழடிக்கு வந்து இந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.

பின்னா், இங்கு அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அருங்காட்சியத்துக்கும் சென்று தொல்பொருள்களைப் பாா்வையிட்டாா். கீழடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்ரமணியன், அகழாய்வுத்தள அலுவலா் அஜித்குமாா் ஆகியோா் திறந்தவெளி அருங்காட்சியம் குறித்து விளக்கினா்.

திறந்தவெளி அருங்காட்சியகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், உலகத் தமிழா்கள் பண்டைய தமிழா்களின் கலாசாரங்களை அறிந்து கொள்ள கீழடிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT