முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:18 AM
திருப்பத்தூா் தம்பிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற காளையா்கள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 8:35 PM

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டியில் கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 18 காளைகள் கொண்டுவரப்பட்டன.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:18 AM

இதில் ஒரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். 20 நிமிஷங்களுக்குள் காளைகளை அடக்கினால், வீரா்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில், காளைகள் வெற்றி பெற்ாகவும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

வெற்றி பெற்ற வீரா்கள், காளையின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு, தென்னங்கன்று, வைக்கோல் கட்டு, அரிசி மூட்டை, சில்வா் பாத்திரம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.