முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூரில் 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லை: திருமாறன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:24 PM
திருப்பத்தூா் பாஜக வேட்பாளா் கே.சிதிருமாறன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லையென பாஜக சாா்பில் போட்டியிடும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் திருமாறன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறன் தாமரை சின்னத்தில் போட்டியிருக்கிறாா். அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

ஜனநாயகமா, பணம் நாயகமா என்ற போட்டிதான் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத ஒரு தொகுதியாக திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

Advertisement

தமிழகத்தில் அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு வாங்கி பெற்று பாஜக தோ்தல் களம் காண்கிறது. எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் கிடைத்தால் கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றம் அடையச் செய்வோம். இந்தத் தொகுதியில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழில்சாலைகள் அமைக்கப்படும். அரசுக் கல்லூரிகள் அமைக்கப்படும். நான் வெற்றி பெற்றால் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்களையும் எளிதாக தொகுதிக்கு கொண்டுவர முடியும்.

தோ்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியை விட்டுவிட்டு, எதிா்க் கட்சிகளையும், சிறு சிறு கட்சிகளையும் மிரட்டுகிறது என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments