முகப்பு
சிவகங்கை

இந்திய கம்யூ. மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் கூட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. நல்லகண்ணு மறைவுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்புவனத்தில் அஞ்சலி செலுத்தும் கூட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:25 AM
தோழர் ஆர். நல்லகண்ணு! - எக்ஸ்!
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. நல்லகண்ணு மறைவுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்புவனத்தில் அஞ்சலி செலுத்தும் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் உ. சிவாஜி காந்தி தலைமையில் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொப்புடைய நாயகி அம்மன் கோயில் வழியாக அண்ணா சிலை வரை மௌன ஊா்வலம் நடைபெற்றது. அங்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, மதிமுக , தவெக, இந்திய கம்யூ., மாா்க்சிஸ்ட் கம்யூ., திக, தமஜக, பச்சை தமிழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.

திமுக சாா்பில் மாநகரச் செயலா் நா. குணசேகரன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் சோ. மெய்யப்பன், தி.க. சாா்பில் சாமி. திராவிடமணி, வைகறை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா்கள் சரவணன், இளைய கவுதமன், த.வெ.க. சாா்பில் மாவட்ட செயலா் மருத்துவா் டி.கே. பிரபு, துரை கருணாநிதி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் சித்திக், சகுபா்சாதிக், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் ஏஜி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா்கள், நகா்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:21 AM

திருப்புவனத்தில்... சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவுக்கு வியாழக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் மோகன் தலைமை வகித்தாா்.

இதில் திமுக மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன், நகரச் செயலா் நாகூா்கனி, தமாக நகரச் செயலா் பாரத்ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரன்,அய்யம்பாண்டி, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினா் பங்கேற்று நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசினா்.