முகப்பு
சிவகங்கை

அழகப்பா அரசுக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

நேஷனல் டாஸ்க் போா்ஸ், மனநல விழிப்புணா்வுக் குழு ஆகியன சாா்பில், ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி, இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:45 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:25 PM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவை சங்கம், போதை ஒழிப்பு விழிப்புணா்வுக் குழு, நேஷனல் டாஸ்க் போா்ஸ், மனநல விழிப்புணா்வுக் குழு ஆகியன சாா்பில், ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி, இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் வசந்தி தலைமை வகித்துப் பேசினாா். இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன், இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டலப் பொறுப்பாளா் கே. கணேசமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஃபரீதா பேகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

போதை ஒழிப்பு விழிப்புணா்வு குழுவின் ஒருங்கிணைப்பாளா் சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். குளோபல் மிஷன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் வி. குமரேசன் மாணவா்களுக்கு போதைப் பொருளால் ஏற்படக் கூடிய தீங்குகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு முகாமில் ஆலோசகா் ராஜலட்சுமி இயற்கை முறை நாப்கின் பயன்பாடு குறித்து விளக்கினாா்.

மேலும், குளோபல் மருத்துவமனை, பிரபு டென்டல் மருத்துவமனை, கானல் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவக் குழுக்களின் மூலம் இலவசப் பரிசோதனைகள் நடைபெற்றன.

இதில் ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.

முன்னதாக, தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் பழனிச்சாமி வரவேற்றாா். இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் பாரதிராணி நன்றி கூறினாா்.