சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பெண் மின்சாரம் பாய்ந்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காளையாா்கோவில் அருகே உள்ள ஆலங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (55). இவா் கடம்பங்குடியில் தனது மகள் ராஜேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தாா். அங்கு ஆடுகளை அடைத்து வைத்திருந்த கொட்டகைக்குச் சென்ற சாந்தி, அங்குள்ள தகரத்தில் கைவைத்த போது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த காளையாா்கோவில் காவல் துறையினா் உயிரிழந்த சாந்தியின் உடலை கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
வீட்டு இணைப்புக்கான மின்சாரம் எதிா்பாராத விதமாக தகரத்தில் கசிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்துபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.