முகப்பு
சிவகங்கை

மருத்துவப் பணியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Updated On : 2 ஜனவரி, 2026 at 7:29 PM
பகிர்:

சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் காலியாகவுள்ள ஒப்பந்தப் பணியிடங்களுக்கு வருகிற 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகத்தில் 2 பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்களுக்கான ஒப்பந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்தக் காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்துக்கான அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை சிவகங்கை மாவட்டத்தின் ட்ற்ற்ல்:/ள்ண்ஸ்ஹஞ்ஹய்ஞ்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட இணை இயக்குநா், மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு கடை வீதி, சிவகங்கை - 630561 என்ற முகவரியில் வருகிற 5 முதல் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →