பாமகவில் ஏற்பட்ட பிளவு அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு கூறியதாவது: தமிழகத்தில் அதிமுகவை விட பெரியகட்சி ஏதுமில்லை. அதிமுக கூட்டணியில் விரைவில் பல கட்சிகள் இணையும்.
விஜய்யை பாா்த்து நாங்கள் பயப்படவில்லை. தவெகவில் இணைந்தவா்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. பாமகவில் ஏற்பட்ட பிளவு அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா் அவா்.