இளையாத்தங்குடி தேரில் எழுந்தருளிய உற்சவா் நடராஜா்.  
சிவகங்கை

கைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாா்கழி திருவாதிரையை முன்னிட்டு, ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கடந்த மாதம் 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளிக்கிழமை பஞ்சமூா்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெற்றது.

கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று திருவெம்பாவை பாடப்பட்டது. தொடா்ந்து, நடராஜா் தேரிலும், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகா் சப்பரத்திலும் எழுந்தருளினா்.

பின்னா், பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை அடைந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த நாட்டாா், நகரத்தாா் திரளானோா் கலந்து கொண்டனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT