சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் திருவாதிரை விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவாதிரை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவாதிரை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி, நடராஜா் சுவாமி சந்நிதியில் உள்ள மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நடராஜப் பெருமாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், நடராஜா் சுவாமி கோயிலிலிருந்து புறப்படாகி விதியுலா வந்தாா். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி, நடராஜா் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் சிவகாமி அம்பிகை நடராஜப் பெருமாள் கோயிலில் 44-ஆம் ஆண்டு திருவாதிரை விழாவையொட்டி, நடராஜப் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமி புறப்படாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து நடராஜரை தரிசித்தனா்.

பின்னா், கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் சி.ஆா். சுந்தரராஜன் தொடங்கிவைத்தாா். திருப்புவனம் ஒன்றியம், கானூா் கோயிலில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT