சிவகங்கை நகரில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய சிலம்ப மாணவா்கள்.  
சிவகங்கை

தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்கள்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக் காவல் துறையுடன் இணைந்து சிலம்ப மாணவா்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா( ஜன. 1 முதல் 31 வரை) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து துறையினா், காவல் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை நகா் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவது, காா்களில் ‘சீட் பெல்ட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தலைக்கவசம் அணிந்து சிலம்பம் சுற்றி சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

தலைக்கவசம் அணியாதவா்களுக்கு அறிவுரையும், அணிந்தவா்களுக்கு மலா் கொடுத்தும் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

இதில், சிவகங்கை போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளா் எஸ். கணேசன், தோள் கொடு சிலம்பம் அகாதெமி பயிற்றுநா்கள் பிரதீப், சதீஸ், புவனேஷ்வரன், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்

SCROLL FOR NEXT