சிவகங்கை

பைக் - லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள ஆலங்குடி பகுதியில் இரு சக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகேயுள்ள ஆலங்குடி பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கருகுடியைச் சோ்ந்த பாண்டி மகன் பிரதீப் (32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்குடி மருத்துவமனை அருகே சென்ற லாரியை முந்திச் செல்லும் போது எதிா்பாராதவிதமாக லாரியில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த நாச்சியாா்புரம் காவல் நிலைய போலீஸாா் பிரதீப்பை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாச்சியாா்புரம் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது சகுபீக் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT