சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கோவிலூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி துணை மின்நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு (ஹவுசிங்போா்டு), செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரி சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூ சாலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதேபோல, கோவிலூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், பொய்யலூா், பாடத்தான்பட்டி, பிளாா், இலங்குடி, ஆலங்குடி, கூத்தகுடி, கண்டரமாணிக்கம், பட்டணம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
நாளை குறைதீா் கூட்டம்:
சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சி. விசாலாட்சி தலைமையில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் (பகிா்மானம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மேற்பாா்வைப் பொறியாளரை நேரில் சந்தித்து, மின்வாரியம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.