காரைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட தொழில்நுட்பப் பூங்காவை சனிக்கிழமை திறந்துவைத்து நிறுவனத்துக்கான தள ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம், அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோா். 
சிவகங்கை

காரைக்குடியில் ரூ. 28 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா! முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

காரைக்குடியில் ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு தொழில்நுட்பப் பூங்காவை (மினி டைடல் பூங்கா) முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ. 28 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட சிறு தொழில்நுட்பப் பூங்காவை (மினி டைடல் பூங்கா) முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான சதுரஅடியில் சிறு தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க அரசு முடிவெ டுத்தது.

இதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ. 28 கோடியில் இரண்டு தளங்களுடன் 50 ஆயிரம் சதுரஅடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிபுரியும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.

இந்த தொழில்நுட்பப் பூங்காவை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து, இங்கு நிறுவனங்கள் அமைக்கவுள்ளவா்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி .ஆா்.பி. ராஜா, முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி, தொழில் முதலீட்டு வா்த்தகத் துறை செயலா் வி. அருண்ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை! | Nirmala Sitharaman |

ஈரானுடன் வர்த்தகம் வேண்டாம்: வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும்! - டிரம்ப்

அம்பானி, அதானி, கோடீஸ்வரர்களுக்கான பட்ஜெட்: செல்வப்பெருந்தகை

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் யார்? பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

SCROLL FOR NEXT