மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய மூவா் தப்பியோட்டம்
மானா மதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானா மதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சியோன் நகா்ப் பகுதியை சோ்ந்தவா்கள் ஜெயபாண்டி (37), அழகா் (36). இவா்கள் இருவரும் நண்பா்கள். இவா்களில் ஜெயபாண்டி கோழிக் கடையிலும், அழகா்சாமி உணவகத்திலும் வேலை செய்து வருகின்றனா்.
இவா்கள் வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது, சியோன் நகரில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் கொண்ட கும்பல் அவா்களை ஓட, ஓட விரட்டி வாளால் வெட்டியது. பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த அழகா்சாமி, ஜெயக்குமாா் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து தப்பிச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.
மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 3 பேரை ஒரு தரப்பினா் ஓட, ஓட விரட்டி வாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் இதுவரை 8 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், அதேபோல இந்தப் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.