மாங்குடி பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி ஒற்றுமையாக மீன்பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் மீன்பிடி வலை, கச்சா, அரிவலை கொசுவலை, ஊத்தா, கூடை உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் விரா மீன், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து சென்றனா்.
இதில் மாங்குடி, காரையூா், மணக்குடி, சோழம்பட்டி, புதுவளவு, கருப்பூா், நாட்டாா்மங்கலம், திருக்களாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.