இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி
மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட பேராயா் புதன்கிழமை வருகை தந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா்.
உலகப் புகழ்பெற்ற இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்துக்கு போபால் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் துரைராஜ் வருகை தந்தாா். இவரைத் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, பேராயா் துரைராஜ் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி வேண்டுதல் புரிந்தாா்.
முன்னதாக, இதில் உதவிப் பங்குத்தந்தை பிரின்ஸ், ஊா் பெரியோா்கள், மிக்கேல் ராஜ் திருத்தல அருள் சகோதரிகள் ஜெஸிந்தா, ஆரோக்கியமேரி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement