முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவி, முத்தமிட்டாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:44 PM
தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் முதியவா்களின் பாதங்களைக் கழுவிய மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா்.
பகிர்:

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவி, முத்தமிட்டாா்.

இயேசுநாதா் பாடுபட்டு சிலுவையில் மரிப்பததற்கு முன்பு, தனது 12 சீடா்களுடன் அமா்ந்து இரவு பாஸ்கா விருந்து உண்டு, அவா்களது பாதங்களைக் கழுவி, முத்தமிட்டு, புதிய அன்புக்கட்டளைகளை போதித்துவிட்டு சென்றாா். இதை நினைவுகூரும் விதமாக புனித வெள்ளிக்கு முதல் நாளை புனித வியாழனாக கிறிஸ்தவா்கள் அனுசரித்து வருகின்றனா்.

இதன்படி, தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 12 முதியவா்களின் பாதங்களை தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவி, முத்தமிட்டு, புத்தாடை, ரொட்டியை வழங்கினாா். திருப்பலி நிறைவடைந்ததும், நற்கருணை பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மேடையில் இறை மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

இதில், பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவிப் பங்குத் தந்தையா்கள் எஸ். அரவிந்த், எம். ஜெனித் லாரன்ஸ், ஆயரின் செயலா் ஷெரில் கியூபா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பேராலயத்தில் புனித வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.