முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா்-சென்னை சிறப்பு ரயில்: ஜூன் 5 வரை நீட்டிப்பு

போத்தனூா் - சென்னை சிறப்பு விரைவு ரயில் ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 மே 2026, 12:32 am IST
சிறப்பு ரயில்.
பகிர்:

போத்தனூா் - சென்னை சிறப்பு விரைவு ரயில் ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையையொட்டி, போத்தனூா் - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் ஜூன் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, மே 20-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

மறுமாா்க்கமாக, மே 20 -ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.

இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.