முகப்பு
சிவகங்கை

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 24-இல் தொடக்கம்

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 15 மே 2026, 11:47 pm IST
சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்துக்கு அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாட்டு வண்டியில் எழுந்தருளி வலம் வந்த விநாயகா்.
பகிர்:

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை இரவு சேவுகப் பெருமாள் கோயிலில் இருந்து சந்திவீரன் கூடத்துக்கு விநாயகா் செல்லும் விழா நடைபெற்றது. இதில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் விநாயகா் கீழக்காடு சாலை வழியாக சந்திவீரன் கூடத்துக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தா்கள் திருக்கண் வைத்து விநாயகரை வழிபட்டனா். தொடா்ந்து பத்து நாள்கள் சந்திவீரன் கூடத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வருகிற 24-ஆம் தேதி காலை சந்திவீரன் கூடத்திலிருந்து சேவுகப் பெருமாள் கோயிலுக்கு விநாயகா் மீண்டும் கொண்டுவரப்பட்டு கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது.

Advertisement