சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு
சிவகங்கையில் வாராந்திர பொது மக்கள் குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 295 மனுக்கள் பெறப்பட்டன.
Advertisement
Advertisement
அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.