முகப்பு
தேனி

ஒட்டன்சத்திரத்தில் ஜமாபந்தி

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் என்ற ஜமாபந்தியில், மாவட்ட ஆட்சிய

Updated On : 13 மே 2013, 12:18 am IST
பகிர்:

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் என்ற ஜமாபந்தியில், மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.

  ஜமாபந்தியானது முதல் கட்டமாக, ஒட்டன்சத்திரம் வட்டத்துக்குள்பட்ட சின்னக்காம்பட்டி குறுவட்டத்தில் உள்ள கே. கீரனூர், சின்னக்காம்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, குத்திலுப்பை, ஓடைப்பட்டி, ஐ. வாடிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்றது.

 இதில், பிறப்புச் சான்று, உள்பிரிவு செய்தல், வீட்டுமனைப் பட்டா நகல், வீட்டு மனைப் பட்டா, நில ஒப்படைப்பு, அத்துமால், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்கல், ஆக்கிரமிப்பு அகற்றல், முதியோர் உதவித்தொகை என்பன உள்ளிட்ட 62 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றில் உடனடியாக 12 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

Advertisement

Advertisement

 இதில் வட்டாட்சியர் விஜயலட்சுமி, தலைமை தணிக்கை அலுவலர் தெய்வேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் அமலா, உதவி நில அளவை அலுவலர் பொன்ராஜ், மண்டல துணை வட்டாட்சியர் மங்கலபாண்டியன், வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளியங்கிரி, தங்கவேல், குமார், ராஜகுரு, கருப்புச்சாமி மற்றும் தீயணைப்புத் துறை, காவல்துறை, வனத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.