தாயும், மகளும் தற்கொலை முயற்சி
வீரபாண்டி அருகே கணவர் குடிப் பழக்கத்துக்கு ஆளானதால் மன வருத்தத்தில் இருந்த மனைவி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாணவி இறந்தார்.
வீரபாண்டி அருகே கணவர் குடிப் பழக்கத்துக்கு ஆளானதால் மன வருத்தத்தில் இருந்த மனைவி மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகள் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாணவி இறந்தார்.
வீரபாண்டி அருகே வயல்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 3 குழந்தைகள். கூலித் தொழிலாளியான முருகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம்.
இதனால் வருத்தத்தில் இருந்த மனைவி தனது 2 ஆவது மகள் 10 ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினிக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், அஸ்வினி உயிரிழந்தார். வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.