விழாக்களுக்காக வெட்டப்படும் மூங்கில் மரங்கள்:வன வளம் அழிவதைத் தடுக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் திருவிழாக்களுக்காக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திருவிழா ஆரம்பமாகும்போது, வனப்பகுதிக்குச்
தேனி மாவட்டத்தில் திருவிழாக்களுக்காக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் திருவிழா ஆரம்பமாகும்போது, வனப்பகுதிக்குச் சென்று மூங்கில் மரத்தை வெட்டி எடுத்து வந்து பூமி பூஜை செய்வர். இவ்வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
தற்போது ஒன்று அல்லது இரண்டு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக ஏராளமான மூங்கில் மரங்களை வெட்டி வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதற்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை.
பொதுவாக உயர்ந்த மரங்களான ஓக், பைன், யூகலிப்ட்ஸ், மூங்கில் போன்றவை இயற்கையாகவே அதிக அளவில் மழையைத் தரக்கூடியவை.
இப்படிப்பட்ட வளமிக்க நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்களை வெட்டுவது வனவளத்தை அழிக்கும் செயல் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் திருவிழா என்ற பெயரில் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.