தேனி

மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கணவர், மாமனார் மீது வழக்கு

DIN

நீதிமன்ற உத்தரவின்படி ஜீவனாம்சம் வழங்காமல் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக, கணவர், மாமனார் உள்ளிட்ட 3 பேர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா (27). இவருக்கும், ஆண்டிபட்டியைச் சேர்ந்த பரசுராம் மகன் பிரபாகரன (34) என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 10 நாள்களுக்குப் பின், பிரபாகரன் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று விட்டாராம். திருமணத்தின்போது, சசிகலாவின் பெற்றோர் அவருக்கு பதினைந்தரை பவுன் நகை அணிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நகைகளை வாங்கி வைத்துக்கொண்ட பிரபாகரன், சசிகலாவுடன் சேர்ந்து வாழாமல் இருந்து வந்தாராம்.
இது குறித்து நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கில், சசிகலாவுக்கு பிரபாகரன் ஜீவனாம்சமாக மாதம் ரூ.7,500 மற்றும் குடியிருக்க வீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு ஜீவனாம்சமும் வழங்காமல், தன்னிடம் வரதட்சணையாக மேலும் 10 பவுன் நகை கேட்டு, தன்னை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக, பிரபாகரன், அவரது தந்தை பரசுராம் மற்றும் உறவினர் ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயபுஷ்பம் ஆகியோர் மீது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரனிடம் சசிகலா புகார் அளித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், புகாரின் அடிப்படையில் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேர் மீது, தேனி மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT