தேனி

பள்ளி வேன் கவிழ்ந்து பணியாளர்கள் 20 பேர் காயம்

DIN

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பள்ளி வேன் கவிழ்ந்ததில் மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி பணியாளர்கள் 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
 மதுரையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி பணியாளர்கள் 20 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.  இதில் வேன் ஓட்டுநர் மோகன் (26) மற்றும் பள்ளிப் பணியாளர்கள் ஆனந்தகுமார் (25), கேசவன் (18), திவ்யா (26), கேத்ரின் (26) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
 இவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT