தேனி

பெரியகுளம் அருகே கோயிலில் முடி காணிக்கைக்கு அதிக தொகை வசூலிப்பதாக புகார்

DIN

பெரியகுளம் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு அதிக தொகை வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது, நெய் விளக்கு மற்றும் முடிகாணிக்கைக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முடிகாணிக்கைக்காக ரூ. 20 கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. அதன் பின் முடி எடுக்கும் நாவிதர்கள் ரூ.100 முதல் ரூ.200 வரை பெற்றுக் கொள்கின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே முடி காணிக்கைக்கு கோயில் நிர்வாகத்தினர் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் உதவி ஆணையர் சிவலிங்கத்திடம் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை எடுக்க வில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT