தேனி

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அலுவலகத்துக்கு ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற என பல்வேறு தேவைகளுக்காக உத்தமபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருகின்றனர். அதில் பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகளான சுகாதார வளாகம், குடிநீர் உள்பட எவ்வித வசதியும் இல்லை. இதனால் பெண்கள், முதியோர் மிகவும் அவதியடைகின்றனர். பலர் திறந்த வெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT