முகப்பு
தேனி

கோயிலில் மணி திருடிய இளைஞர் பிடிபட்டார்

கம்பத்தில் உள்ள கோயிலில் மணியை திருடிய இளைஞர் பிடிபட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கம்பத்தில் உள்ள கோயிலில் மணியை திருடிய இளைஞர் பிடிபட்டார்.
 கம்பத்தில் உள்ள பச்சியம்மன் குளம் ஈசுவரன் கோயிலில் பூசாரியாக இருப்பவர் ராஜேந்திரன் (60). இவர் புதன்கிழமை காலையில் கோயிலை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் கோயிலில் கட்டப்பட்டிருந்த வெண்கல மணிகளை திருடினார்.  இதையடுத்து ராஜேந்திரன்  சத்தம் போடவே அவர் தப்பி ஓடினார். அருகில் உள்ளவர்கள் அவரை பிடித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →