தேனி

திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு ரத யாத்திரை தொடக்கம்

DIN

தேனியில் வேலை வாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைத்தார்.
 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகாமை மற்றும் மகளிர் திட்டம் சார்பில்,  தீன தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய திட்டம் குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த ரத யாத்திரையை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது:
 வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சிகள், பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகள், பயிற்சிக்குப் பின் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகள், பயிற்சிக்கு விண்ணப்பித்தல் ஆகியவை குறித்து கிராமப்புற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊராட்சிகளில் அக்.10-ஆம் வரை இந்த ரத யாத்திரை நடைபெறுகிறது என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் வடிவேல்,  மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கல்யாண சுந்தரம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அபிதா ஹனீப் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT