தேனி

கம்பம் உழவர் சந்தையில் சாலையோரக் கடைகள்: போக்குவரத்து பாதிப்பு

DIN

கம்பம் உழவர் சந்தையில் சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கம்பம் உழவர் சந்தை அருகில் கேரள மாநிலம் இருப்பதால் சராசரியாக நாளொன்றுக்கு 10 முதல் 15 டன் காய்கறிகள் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்ட கடைகளை விட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் உழவர் சந்தையைச் சுற்றிலும் சாலையோரகடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கார், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர், பாதசாரிகள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையினரும்  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT