தேனி

குமுளி மலைப்பாதையில் கேட்பாரற்று நின்ற கார்: போலீஸ் விசாரணை

DIN

குமுளி மலைப்பாதையில் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரை வெள்ளிக்கிழமை லோயர்கேம்ப் போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த பாதை தமிழக எல்லை லோயர்கேம்ப்பிலிருந்து கேரள மாநிலம் குமுளி வரை 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. 5 ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை சோதனை சாவடிகளுக்கிடையே ஒரு கார் கடந்த 5 நாள்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுபற்றி லோயர்கேம்ப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.என். 31 ஏ.ஒய். 3705 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT