முகப்பு
தேனி

தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:53 AM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 208 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மடிக்கணினிகளை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன்,  அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.பி.சையதுகான், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் டி.டி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.